Wednesday, June 15, 2005

 

பிள்ளையார் சுழி


அனைவருக்கும் வணக்கம்.

அட! நானும் கூட ஒரு வலைப்பதிவை தொடங்கிவிட்டேன். இனி நானும் எனது கருத்துக்களைத் தெரிவிக்கலாம், சக வலைப்பதிவாளர்களின் கருத்துக்களையும் அறியலாம். அதுவும் தமிழில்! ஆகா! நினைத்தாலே இனிக்கிறது. ஏதோ என் சினேகிதன் கண்ணன் கொடுத்த ஊக்கத்தில் இந்த வலைப்பதிவை தொடங்கிவிட்டேன். ஆனால், சத்தியமாக என்னவெல்லாம் எழுதலாம், எந்த விஷ(ட)யத்தைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்றெல்லாம் நினைத்தும் பார்க்கவில்லை திட்டமிடவுமில்லை (இப்போதைக்கு யாராவது மண்டபத்தில் எழுதிக் கொடுத்தால் தான் உண்டு).

அடேங்கப்பா! ஒரு பத்தி எழுதிவிட்டேனா ! ... சரி, முதல் பதிப்பிற்கு இவ்வளவு போதுமே.

Comments:
வா கிச்சா,

நல்வரவு.

அப்படியே ஒரு நடை தமிழ்மணத்தில் பதிந்துவிட்டால் 500 க்கும் மேற்பட்ட தமிழ் வலைஞர்களின் குழாத்தில் சேரலாமே!

இங்கே தமிழ்மணத்தில் பதிந்த வலைப்பதிவுகளில் இருந்து செய்தியோடை வழியாக பதிவுகள் திரட்டப் படுகின்றன - உன் எழுத்தை / உரத்த சிந்தனைகளை பொதுக்களத்திற்கு எடுத்துச் செல்ல, மற்ற தமிழ் வலைஞர்களுட அவற்றைப் பகிர்ந்துகொள்ள, முக்கியமாக, பல நல்ல விடயங்களை, மனிதர்களைத் தெரிந்துகொள்ள என்று இங்கே வரப் பல காரணங்கள் உண்டு...

கலக்கு!
 
கண்ணா,
தமிழ்மணத்தில் பதியலாம் என்று நினைத்து அங்கு சென்றபோதுதான் தெரிந்தது - குறைந்தபட்சம் 3 பதிவுகளாவது இருக்கவேண்டும் (சோதனை பதிவைத்தவிற) என்று. அதனால் தான் இன்று பதியவில்லை.
 
வாங்க கிச்சா. அந்த மூணு பதிவுச் சட்டத்தை மாத்திட்டோம். உங்க பதிவ இப்போ தமிழ்மணத்துல பார்க்கலாம்.

கண்ணன் நண்பரா நீங்க. வாங்க வாங்க!
 
வரவேற்புக்கும், தமிழ்மணத்தில் இணைத்தமைக்கும் நன்றி செல்வராஜ்.
நானும் ஈரோடு மாவட்டத்தில் வளர்ந்தவன் தான்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது